வெளில போன புள்ளைய காணோம் 'பதறியடித்து' தேடிய பெற்றோர்... வீட்டுக்கு பக்கத்திலேயே 'காத்திருந்த' அதிர்ச்சி... தானா இப்படி நடந்துச்சா இல்ல?
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெளியில் சென்ற கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் (19). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கள்ளிக்குப்பத்தில் உள்ள தாங்கல் என்னும் ஏரியை சுற்றி கரையோரத்தில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை நண்பர்களுடன் அப்பகுதிக்கு சென்ற சஞ்சய் கால்தவறி 15 அடி பள்ளத்தில் விழுந்து விட்டதாக தெரிகிறது. தொடர்ந்து பள்ளத்தில் நிரம்பி இருந்த தண்ணீரில் மூழ்கி சஞ்சய் இறந்து விட்டார். தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் இருட்டி விட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உதவியுடன் மொபைல் வெளிச்சத்தில் சஞ்சயின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் போலீசார் சஞ்சய் தானாக தவறி விழுந்தாரா? இல்லை அவரை யாராவது தள்ளி விட்டார்களா? என்ற ரீதியில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
