வெளிய ஆயுர்வேத 'ஸ்பா' போர்டு... ஆனா 'உள்ள' நடக்குறதே வேற..." வெளியான அதிர்ச்சி 'தகவல்'... போலீசார் எடுத்த 'அதிரடி'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி மாநகரத்தில் ஸ்பா மற்றும் ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
![trichy prostitution held in name of ayurveda spa police arrested trichy prostitution held in name of ayurveda spa police arrested](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/trichy-prostitution-held-in-name-of-ayurveda-spa-police-arrested.jpg)
இந்த தகவலின் படி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பெயரில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று போலீசார் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில், வெவ்வேறு இடங்களில் ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாவில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது உறுதியானது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ள நிலையில், அங்கிருந்து 10 பெண்களை மீட்டனர். அதே போல தப்பியோடிய ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
நகரங்களின் பல பகுத்திகளில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்கள் நடைபெற்று வரும் நிலையில், போலீசார் உடனடியாக அனைத்து இடங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)