'வெளியிலதான் பேங்க் கேஷியர்!'.. 'லேப்டாப்.. செல்போனைப் பார்த்தாதான் தெரியுது பெரிய காமுகன்'!.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்! பகீர் வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி, மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் (வயது 35) புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்தவர்.

தஞ்சை மாவட்டம் ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் இவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான நாளில் இருந்தே எட்வின் ஜெயக்குமார், தன் மனைவியுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்ததுடன், மனைவி தாட்சர் குடும்பத்தாரிடம் 50 பவுன் நகை கேட்டும் துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த தாட்சர், அவரது பீரோவை சோதனை நடத்தியதில் 10 செல்போன்கள், லேப்டாப் சிக்கியதுடன், அதில் பல்வேறு பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் இருப்பது போன்ற 100 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. இதனால் அதிர்ந்த தாட்சர், அப்போதைய தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதனிடம் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி அளித்த புகாரின் எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மதுரை ஐகோர்ட்டில் எட்வின் ஜெயக்குமார் ஜாமீன் பெற்றுக் கொண்டு குடும்பத்தோடு தலைமறைவானார். அதன் பின்னர் எட்வின் ஜெயக்குமார் தீவிரமாக தேடிக்கண்டுபிடிக்கப்பட்டார். அவர் விசாரணையில் கூறிய வாக்குமூலங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, என்ஜினீயரிங் படிப்பு முடித்த எட்வின் ஜெயக்குமார், வங்கித் தேர்வு எழுதி கடந்த 2014-ம் ஆண்டு குளித்தலையில் உள்ள வங்கி ஒன்றில் கிளர்க்காக பணியில் சேர்ந்து, பின்னர் 2016-ம் ஆண்டு பணிமாறுதல் ஆகி புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். மேலும் தாட்சருடனான திருமணத்திற்கு முன்னர் எட்வினுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுடன் உல்லாசமாக இருந்ததை எட்வின் தனது செல்போனில் பதிவு செய்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்ததால், அவருக்கு மனைவி மீது எனக்கு ஈர்ப்பு இல்லாமல் போய் விட்டது.
அப்போதுதான் எட்வினுக்கு வரும் ஆபாச குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை மனைவி தாட்சர் பார்த்து விட்டார். அத்துடன் எட்வின் தனது வங்கியில் வேலை பார்க்கும் சக ஊழியர்களையும், வீட்டின் அருகில் வசிக்கும் பெண்களையும், அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து செல்போனில் வைத்திருந்ததுடன், வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் பாஸ்புக் மற்றும் பணபரிவர்த்தனைகளையும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்திருந்துள்ளார்.
இதுபற்றி கேட்ட தாட்சரை எட்வினும் அவரது தாயாரும் சேர்ந்து திட்டியுள்ளனர். இதனால் எட்விம், தன் மனைவி தாட்சர் குளிக்கும் போது அவருக்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து “இனி என்னிடம் பிரச்சனை பண்ணினா, நான் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவேன்” என மிரட்டினார். அதன் பின்னரே தாட்சர் தன் அம்மா வீட்டுக்கு சென்றதுடன், எட்வின் மீது புகார் அளித்தார்.
எட்வின் ஜெயக்குமாரின் இந்த அதிரவைக்கும் வாக்குமூலத்தால் அவருடன் தொடர்பில் இருந்த பெண்கள் அடிவயிற்றில் புளியை கரைத்தாற்போல் கலக்கத்தில் உள்ளனர். ஆனால் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் கொடுக்க முன்வரவில்லை. அவ்வாறு புகார் கொடுக்கும் பட்சத்தில் 'காமுகன்' எட்வின் ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் தயாராக உள்ளனர்.

மற்ற செய்திகள்
