’திருச்சியில் பயங்கரம்... 14 வயது சிறுமி எரித்து கொலை...’ - காண பொறுக்காமல், கதறி துடித்த பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jul 06, 2020 08:16 PM

திருச்சி மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

trichy district 14 yr old girl burnt to death murder somarasanpet

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் வசிக்கும் பெரியசாமி என்பவரின் 14 வயது மகள் கங்காதேவி அதவத்தூர்பாளையத்தின் முள்ளுக்காட்டில் வைத்து எரித்துள்ளனர்.  இந்த கொடூர செயலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கங்காதேவி. இவர் மதியம் ஒரு மணி வரைக்கும் வீட்டிலிருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு வீட்டைவிட்டு வெளியே வந்த மாணவியை நெடு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பதட்டமடைந்து தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது ஊருக்கு வெளிப்புற பகுதியில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முட்புதருக்கு அருகே மாணவி ஏன் சென்றார், கொலை செய்தது யார் என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமரசன்பேட்டை போலீசார் மாணவி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மதியம் 1 மணி வரை வீட்டிலிருந்து வெளியே வந்த மாணவியை எரிந்த நிலையில் பார்த்த உறவினர்கள் அங்கேயே கதறி அழுதனர். மாணவியின் சடலத்திற்கு அருகே தீப்பெட்டி, பெட்ரோல் என அனைத்தும் இருந்துள்ளது. எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.

Tags : #CHILDABUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Trichy district 14 yr old girl burnt to death murder somarasanpet | Tamil Nadu News.