“உல்லாசமா இருக்கும்போது, அந்த மாதிரி ஃபோட்டோ எடுத்து!”! .. நடுங்கவைக்கும் இண்டர்நெட் கஃபே சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏர்வாடியில் கணவனால் கைவிடப்பட்ட பெண் மற்றும் வெளிநாட்டிற்கு பணிக்கு செல்பவர்களின் மனைவிகளை ரகசிய படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நெட் கஃபே உரிமையாளர் உள்ளிட்ட இருவரை கீழக்கரை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
![Net cafe owners hidden app sexual harassment over women Net cafe owners hidden app sexual harassment over women](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/net-cafe-owners-hidden-app-sexual-harassment-over-women.jpg)
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளார். இந்த எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் சமூக விரோத குற்றங்களில் ஈடுபட்டு வரும் கும்பல்கள் சில நாட்களாகவே சிக்கி வருகின்றன.
இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வரும் கும்பலும் அடுத்தடுத்து சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கீழக்கரையில் 3 நாட்களுக்கு முன் பெண்களை குறிவைத்த கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ஏர்வாடி பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் எஸ்பியின் பிரத்தியேக எண்ணில் ஏர்வாடி பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடப்பதாக தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் அப்பெண்ணிடம் விசாரிக்கப்பட்ட போது அந்த பெண் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி ஏர்வாடியைச் சேர்ந்த பாதுஷாவும், ஹாஜியும் நடத்திவரும் ஏர்பாத் நெட் கஃபே என்கிற செல்போன் கடையில், அரசு சான்றிதழ் பெறுவோர், பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதற்கு வருவோர், இணைய வங்கி சேவைகள் மற்றும் பண பரிவர்த்தனைக்காக வருவோர் உள்ளிட்டோருக்கான சேவைகளை சேர்த்து செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் சேவைகளை பெற விரும்பும் பெண்கள், கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில் இருக்கும் பெண்கள் உள்ளிட்டோரின் செல்போனில் எனி டெஸ்க் என்கிற செயலியை இரகசியமாக பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பெண்களின் அந்தரங்கங்களை படம் பிடித்து அதை காட்டி, இவர்கள் மிரட்டி பணம் பறித்து வருவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட கடையில் வேலை பார்த்து வந்த சகாபுதீன் என்பவர் அடிக்கடி தன்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும், தன்னுடன் பலமுறை அவர் உல்லாசமாக இருந்ததாகவும், தன்னை ஆடைகளின்றி வலுக்கட்டாயமாக போட்டோ எடுத்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். இதேபோல் அவர் வேலை பார்த்து வரும் கடை முதலாளியிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கு, தன்னிடம் பணம் கேட்டதாகவும், ஆனால் தன்னால் பணத்தை தர இயலாதபோது தனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக, அவர் மிரட்டி உள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
அந்த படங்களை பாதுஷா, ஹாஜி மற்றும் சகாபுதீன் மூவரும் கூட்டு சேர்ந்து வெளிநாட்டில் உள்ள ஆலீம் என்பவருக்கு அனுப்பியதோடு ஏர்வாடியில் உள்ள சிலரது வாட்ஸப் நம்பருக்கு அனுப்பி உள்ளதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்களை அவர்கள் இதை வைத்து மிரட்டி வருவதாகவும் ஆனால் வெளியில் சொல்ல முடியாத நிலையில் பல பெண்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் மற்றும் சமூக வலைதள பிரிவு உதவியுடன் கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் யமுனா உள்ளிட்டோர் ஏர்பாத் நெட் கஃபே கடையில் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட பாதுஷா மற்றும் சகாபுதீன் இருவரையும் கைது செய்தனர். அதுமட்டுமில்லாமல் இவரிடம் இருந்து 4 செல்போன்கள் ஒரு லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து தடய ஆய்வகத்துக்கு அனுப்பி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)