‘நான் கொஞ்சம் நேரம் அவக்கூட கூட விளையாடிட்டு இருக்கேன்...’ ‘சொந்த தாய் மாமனால்..’. ஐந்து மாத பச்சிளங் குழந்தைக்கு நடந்த கொடூரமான சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேசத்தில் தன் சொந்த சகோதரியின் 5 மாத பெண் குழந்தையை வன்புணர்வு செய்து தூக்கியெறிந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களுக்கு கொந்தளிப்பையும், கவலையையும் அளித்துள்ளது.

ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தன் 5 மாத கைக்குழந்தையுடன் மண்டியன் கிராமத்திற்கு சென்றுள்ளார் . திருமண நிகழ்வின் போது தன் சகோதரர் குழந்தையை விளையாடுவதற்கு கேட்டுள்ளார். தாயும் தன் சகோதரர் தானே என்று எந்தவித சலனமும் இன்றி குழந்தையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு திருமண சடங்குகளில் ஈடுபட்டுள்ளார்.
திருமணம் முடிந்து கொஞ்ச நேரம் கழிந்து தன் சகோதரரையும், குழந்தையையும் தேடியுள்ளார், மண்டபத்தில் எங்கு தேடியும் அவர்களை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த தாய், தன் உறவினர்களோடு அப்பகுதி முழுவதும் தேடிய பின் திருமண மண்டபத்திலிருந்து சிறிது தொலைவில் குழந்தை ஒரு ஓரமாக தூக்கியெறியப்பட்டு அபாய நிலையில் உயிருடன் கண்டெடுக்கப்பட்டது. இதை கண்ட தாயும், உறவினர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர்.
உடனே குழந்தையை அருகில் உள்ள விவேகானந்தா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், உயர் சிகிச்சைக்காக மாவட்ட உயர் சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். துரதிஷ்டவசமாக 5 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.
குழந்தையின் தந்தை மனைவியின் சகோதரர் பப்புவின் மேல் புகார் அளித்துள்ளார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடிவருகின்றனர்.
