3 நாட்களில் ஆதாருடன் இணைக்காவிட்டால்... பான் கார்டு காலாவதியாக வாய்ப்பு... வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் காலக்கெடு... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Dec 28, 2019 09:08 PM
வெளிநாடுகளில் வேலை செய்து வரும் இந்தியர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் எண் வைத்திருந்தால், அவற்றை இன்னும் 3 நாட்களுக்குள் இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு, பின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் டிசம்பர் 31-ம் தேதி காலக்கெடு முடிவடைகிறது. அதற்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடி ஆகாது என மத்திய வருமான வரித்துறை எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பான் மற்றும் ஆதார் எண்கள் வைத்திருந்தால் அவர்களும் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதாக துபாய் கல்ஃப் நியூஸ் (Gulf News) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பான் மற்றும் ஆதார் எண்கள் கட்டாயமில்லை. ஆனால் இவற்றை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட கெடுவிற்குள் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலற்றுப் போய்விட்டதாக கருதப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் இருந்தால் பான் கார்டு வைத்திருப்பது கட்டயாமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இணையதளம் மூலம் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?
1. https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
2. Link Aadhaar என்ற திரை தோன்றும்.
3. திரையில் தோன்றும் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.
ஆதார் மற்றும் பான் கார்டுகளில் உள்ள பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
