‘ஒழுங்கா சம்பளம் கொடுங்க!’.. ‘ஹோட்டல் ஓனர் காரை வழிமறித்து வடமாநில பெண்கள் செய்த காரியம்!’.. நாகையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டத்தில் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறி ஹோட்டல் உரிமையாளர் காரை வழிமறித்து வடமாநில பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே செயல்பட்டு வந்த ஹோட்டல் ஒன்றில், அஸ்ஸாம், நேபாளம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை என்றும், தற்போது பாதி சம்பளமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி கதறி அழுதபடி அப்பெண்கள் இன்று அதிகாலை ஹோட்டல் உரிமையாளரின் காரை வழிமறித்து ஆத்திரமாக சம்பளம் கேட்டு அவரிடம் வினவினர். இதுபற்றி அறிந்து அங்கு வந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததோடு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, காலை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்று அப்பெண்கள் கலைந்து சென்றனர்.
