VIDEO : அட, இந்த 'ஐடியா' கூட நல்ல இருக்கே... 'கொரோனா' கிட்ட இருந்து பத்திரமா இருக்க... அசத்தல் 'பிளான்' போட்ட தமிழக 'அமைச்சர்'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், சில தமிழக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினந்தோறும் பலரை சந்தித்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்ள தனது காரில் வித்தியாசமான பாதுகாப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே, கேரளாவில் காரில் முன் சீட்டுக்கும் பின் சீட்டுக்கும் இடையில் தடுப்பு இருக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதே, வழிமுறையை அமைச்சர் சரோஜா கையில் எடுத்துள்ளார்.
முன்பக்க இரண்டு சீட்டுகளுக்கு தனியாகவும், பின்பக்க இரண்டு சீட்டுகளுக்கு தனியாகவும், பாலிதீன் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்புகளை அமைத்து அது போன்ற மொத்தம் நான்கு தடுப்புகளை தனது காரில் உருவாக்கியுள்ளார். 20 வருடங்கள் மருத்துவராக பணியாற்றிய அமைச்சர் சரோஜா, இதுகுறித்து கூறுகையில், 'தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களில், நாமக்கல் மாவட்டம் குறைவான எண்ணிக்கையை கொண்டுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, மாவட்ட அமைச்சர் தங்கமணி ஆகியோரின் நடவடிக்கைகள் தான். முதல்வர் சொல்லும் நடவடிக்கைகளை சரிவர மேற்கொண்டு வருகிறேன். அதே போல, தினமும் நான் சந்திக்கும் மக்களிடமும் கொரோனா குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி வருகிறேன். எனது காரில் சோதனைகள் அடிப்படையில் சில ஏற்பாடுகளை செய்துள்ளேன். அவ்வளவு தான்' என தெரிவித்துள்ளார்.
இத்தகைய கடினமான சூழ்நிலையிலும், தமிழக அமைச்சர்கள் அனைவரும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தல்படி மிகவும் முன்னெச்சரிக்கையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது மக்களுக்கும் சிறந்த விழிப்புணர்வை அமைச்சர்கள் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu's Minister for Social Welfare V. Saroja has used transparent polythene sheets to compartmentalise her seat inside the car. COVID-19 safety measure. pic.twitter.com/J3t7wQhUUT
— Mohamed Imranullah S (@imranhindu) July 14, 2020