'தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா'... 'சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு'... 'சுகாதாரத்துறை தகவல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 25, 2020 07:34 PM

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை இன்று 1821 ஆக அதிகரித்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu coronavirus updated affected toll rise up today

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 66 பேரில் 38 பேர் ஆண்கள், பெண்கள் 28 பேர் ஆவர். அந்த 66 பேரிலும் சென்னையில் மட்டும் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது

இன்று மட்டும் தமிழகத்தில் 94 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 960 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 52 சதவீதமாகியுள்ளது. சென்னை, குன்றத்தூரை சேர்ந்த 34 வயதுடைய நபர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்றிரவு கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இதை அடுத்து இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்துள்ளது.