இந்த தடவ மிஸ் ஆகாது... "சூப்பர்ஸ்டாரோட 'அரசியல்' இன்னிங்ஸ் 'நவம்பர்'ல ஆரம்பிக்கும்"... கருத்து தெரிவித்த அரசியல் புள்ளி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமிழக அரசியலை மிக அதிகமாக உற்று நோக்கி வரும் நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. ரஜினிகாந்தும் இது தொடர்பாக பல முறை பத்திரிகையாளர்களை சந்தித்து தனது அரசியல் நிலைப்பாட்டை குறித்து கருத்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு மிக நெருக்கமானவரும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய உறுப்பினருமாக செயல்பட்டு வந்த கராத்தே தியாகராஜன், 'ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என சிலர் சொல்கிறார்கள். ஆனால், கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிக்க சாத்தியமில்லை. ஆனால் நவம்பர் மாதத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பார்' என உறுதிபட தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வந்தால் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பேசியிருந்த நிலையில், தனக்கு முதல்வராகும் விருப்பமில்லை எனவும் தெரிவித்திருந்தார். அதே போல, ரஜினிகாந்த் பாஜக கட்சியுடன் இணைந்து அரசியலை சந்திப்பார் என்று சிலரும், மேலும் சிலர் ரஜினிகாந்த் தனியாக அரசியல் கட்சியை தொடங்குவார் எனவும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.