ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ‘ஹேப்பி’ நியூஸ்.. தமிழக அரசு ‘சூப்பர்’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
![TN govt announce good news for Ration card holders TN govt announce good news for Ration card holders](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tn-govt-announce-good-news-for-ration-card-holders.jpg)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 4-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லித்தூள், மிளகு, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதுவரை 88 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 3 நாட்கள் பொங்கல் விடுமுறைக்கு பிறகு இன்று (17.01.2022) முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு வாங்காதவர்கள் வரும் 31-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)