“பிரிஸ்பேன் ஜல்லிக்கட்டில் இறங்குனதுமே விக்கெட்டை அள்ளிய சின்னப்பம்பட்டி காளை!!.. இது டிரைய்லர் தான்” - புழுதி தெறிக்கும் பதிவுகள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்துள்ளனர்.

இதன் மூலம், வலைப்பயிற்சியில் பந்துவீசச் சென்ற ஒரு வீரர் ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகியிருக்கிறார் என்றால் அந்த முதல் இந்திய வீரர் நடராஜன் என்கிற பெருமையை அவர் தற்போது பெற்றிருக்கிறார். இதனால் அனைவரும் நெகிழ்ச்சியில் உள்ள நிலையில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கியது.
இதில் தான் 300 ஆவது வீரராக நடராஜனும், 301 ஆவது வீரராக வாஷிங்டன் சுந்தரும் இடம் பிடித்துள்ளனர். இந்திய பந்துவீச்சாளர்கள் பும்ரா, அஸ்வின், விகாரி, ஜடேஜாவுக்கு மாற்றாக நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மயங்க் அகர்வால் மற்றும் ஷர்துல் தக்கூர் ஆகியோர் இந்த போட்டியில் ஆடுகின்றனர்.
இப்போட்டியில் களமிறங்கியதுமே ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் 35-வது ஓவரில் வீழ்த்தி மார்னஸ் ஸ்மித் பார்ட்னர்ஷிப்பை உடைத்து தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார்.
நடராஜன் வீசிய 64-வது ஓவரில் மேத்யூ வேட் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதேபோல் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த மார்னஸின் விக்கெட்டையும் நடராஜன், தான் வீசிய 66-வது ஓவரில் கைப்பற்றினார்.
இதனால் இந்திய ரசிகர்களும் தமிழ்நாடு ரசிகர்களும் உற்சாகத்தில் இணையத்தில் பல விதமான கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, “ஆஸ்திரேலிய பிரிஸ்பேன் ஜல்லிக்கட்டில் களமிறங்கி விக்கெட்டை அள்ளியிருக்கிறார் சேலத்து சின்னப்பம்பட்டி காளை நடராஜன்” என திருநெல்வேலி துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து புகழ்ந்துள்ளார்.
ஆஸ்திரேலிய “பிரிஸ்பேன் ஜல்லிக்கட்டில்” களமிறங்கி
முதல் விக்கெட்டை அள்ளியது “சேலத்து சின்னப்பம்பட்டி காளை” நடராஜன்💐💐
பிடிபடாத காளை @Natarajan_91 💪
இது சும்மா டிரைய்லர் தான். #உழவர்திருநாள் #மாட்டுப்பொங்கல் #ஜல்லிக்கட்டு pic.twitter.com/8av5dPZBmy
— Arjun Saravanan (@ArjunSaravanan5) January 15, 2021
கடந்த 28 ஆண்டுகளில் பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை தவிர எந்த அணியும் வென்றதில்லை. கடைசியாக 92-93 சீசனில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இந்தியா இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. இந்த வரலாற்றை மாற்றி அமைக்குமா இந்தியா? அதற்கு நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் முக்கிய காரணங்களாக அமைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மற்ற செய்திகள்
