பொங்கல் முடிஞ்சதும் தொடர் லாக்டவுனா?.. நீண்ட நாள் கேள்விக்கு அமைச்சர் பரபரப்பு விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Jan 11, 2022 12:47 PM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில் பொங்கலுக்குப்  பிறகு தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா? என கேள்விகள் எழுந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்," தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

no way to announce full lockdown in TN says ma.subramaniyan

மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. இருப்பினும், அதன் பின்னர் சில மாதங்களாக மாநிலத்தில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. ஆனால், இப்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மக்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.

BCCI போட்ட பிளான் B - இந்த IPL சீரிஸ் முழுவதும் அங்க மட்டும்தான் நடக்கும் போலயே?

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி 1,489 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், 10 நாள் இடைவெளியில் தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. அந்தவகையில் நேற்று 13,990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 28,14,276 ஆக உயர்ந்துள்ளது.

no way to announce full lockdown in TN says ma.subramaniyan

கட்டுப்பாடுகள்

இதையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வாகனங்களில் அத்தியாவசிய பணிகளைத் தவிர இதர பணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

no way to announce full lockdown in TN says ma.subramaniyan

கோயில்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

no way to announce full lockdown in TN says ma.subramaniyan

பொங்கல்

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலுக்குப் பிறகு தமிழகத்தில் முழுமையான லாக்டவுன் அறிவிக்கப்படுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் இருந்துவந்தனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை எனவும் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கடனில் மூழ்கிய Coffee Day நிறுவனத்தை தனியாளாக மீட்டெடுத்த சிங்கப்பெண் மாளவிகா ஹெக்டே..!!

Tags : #CORONA #LOCKDOWN #PONGAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. No way to announce full lockdown in TN says ma.subramaniyan | Tamil Nadu News.