“அவளுக்கு முதல் பிரசவம் சார்.. நான் வேற மாவட்டத்துல மாட்டிக்கிட்டேன்!”.. “உங்க போன் நம்பர் கொடுங்க தம்பி!”.. ட்விட்டரில் கலக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முன்னெப்போதும் இல்லாத அளவில் சமூக வலைதளங்களின் உதவியுடன் மக்களிடம் நல்லுறவை வைத்துக்கொள்வதும், உடனடி தகவல் பரிமாற்றங்களை செய்வதுமான முன்னெடுப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்துவருகிறார்.

இந்நிலையில், சாமானியர் ஒருவர் கூட தமிழக முதல்வரிடம் தனக்கான உதவிகளை நேரடியாகக் கோர முடியும் என்பதை நிருப்பிக்கும் நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம், ஊரடங்கு நேரத்தில் தனது 9 மாத கர்ப்பிணி ஒரு மாவட்டத்தில் இருப்பதாகவும், தான் வேறொரு மாவட்டத்தில் மாட்டிக்கொண்டதாகவும், தனக்கு அங்கு செல்வதற்கான அனுமதி பாஸ் கிடைக்கவில்லை என்றும் கூறி தமிழக முதல்வரை டேக் செய்து, ஃபயாஸ் அர்ஷி என்பவர் ட்விட்டரில் விடுத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வரின் தரப்பில் இருந்து வந்த மறுமொழி மாநிலத்தையே நெகிழவைத்துள்ளது.
இதற்கு ட்விட்டரிலேயே மறுமொழி அளித்த தமிழ்க முதல்வர், “உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி.நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதில்மொழிக்கு நன்றி சொன்ன ஃபயாஸ் அர்ஷி, “நன்றி சார். எனக்கு பாஸ் வந்துடுச்சு. உங்களோட இவ்ளோ பிஸியான வேளைகளிலும் எனக்கு மறுமொழி கூறியது ரொம்ப பெருமையா இருக்கு. ஒரே ஒரு வேண்டுகோள், என்னை போல் இக்கட்டான சூழலில்
உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி.
நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும். https://t.co/1aRTvNwgCc
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 13, 2020
இருக்குற எல்லாருக்கும் பாஸ் கொடுக்கணும்னு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். நிறைய பேருக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
