"எனக்கு அது நம்ப முடியாத 'அனுபவம்'..." 'மனைவி', 'மகள்' புகைப்படத்தை பகிர்ந்து... 'கோலி' போட்ட நெகிழ்ச்சி 'பதிவு'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், இதற்கு அடுத்த படியாக, ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெறவுள்ளது.
இந்த ஐந்து போட்டிகளும், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்த அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக இந்திய கேப்டன் விராட் கோலி அங்கேயே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இன்று சர்வதேச மகளிர் தினம் என்பதால், அனைவரும் பெண்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்திருந்தது. தங்களது குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், தனது மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் மகள் வாமிகா இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, மகளிர் தின வாழ்த்துக்களை விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அதில், 'குழந்தையின் பிறப்பை நேரில் பார்ப்பது என்பது, சற்று பயமாகவும் நம்ப முடியாத மற்றும் ஆச்சர்யம் வாய்ந்த அனுபவமாக இருந்தது. அதனை பார்த்த பிறகு பெண்ணின் வலிமையையும், தெய்வீக தன்மையையும், அவர்களுக்குள் கடவுள் ஏன் ஒரு உயிரை படைப்பதற்கான வாய்ப்பை கொடுத்தார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
ஏனென்றால், ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள். எனது வாழ்க்கையில், சக்தி வாய்ந்த, இரக்கமுள்ள மற்றும் வலிமையான பெண்ணுக்கும், தனது தாயைப் போல வளரவுள்ள மகளுக்கும் எனது மனம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துக்கள்' என விராட் கோலி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.