'நான் பாஜகவில் சேர போகிறேனா'?... 'வரும் சட்டமன்ற தேர்தலில் நிலைப்பாடு என்ன'?... மு.க அழகிரி பரபரப்பு பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து மு.க அழகிரி மதுரையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக மு.க அழகிரி தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து உறுதியான முடிவை எடுக்க இருப்பதாக பல்வேறு தகவல்கள் உலா வந்த வண்ணம் இருந்தது. அதே நேரத்தில் அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வலம் வந்தன. சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான அமித்ஷாவை அவர் சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் பரவின.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போதே பேசிய அவர், ''வரும் தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும். கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அதே நேரத்தில் பாஜகவில் நான் இணைவதாக வெளிவரும் தகவல் வதந்தியே” என பல்வேறு யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

மற்ற செய்திகள்
