'கரிசக்காட்டில் மீண்டும் மருத்துவக் கனவுகள் மலருமா!?'.. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு!.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாத்தின்போது தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வரப்படும். நீட் தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆகும் கனவு குறைந்துவிட்டது.
நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீட் அறிமுகமான பின்னர், மருத்துவக் கல்லூரியில் சேரும் நிலை குறைந்துவிட்டது. நீட் தேர்வு வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும். அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்காக இந்த சட்டம் இயற்றப்படும்" என அறிவித்தார்.
இந்த நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.