10-ம் வகுப்பு தேர்வுக்காக... 'சென்னை'யில் இருந்து 'கொடைக்கானல்' சென்ற மாணவிக்கு... 'காத்திருந்த' அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேர்வு எழுதுவதற்காக மாணவி தன்னுடைய அம்மாவுடன் காரில் கொடைக்கானல் வந்துள்ளார்.
கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதால் வெளியூர்களில் தங்கிப்படித்த மாணவ,மாணவிகள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர். இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
இதனால் மாணவ,மாணவிகள் தங்களது பள்ளிகளுக்கு திரும்ப ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில் கொடைக்கானலில் தங்கிப்படித்த சென்னை மாணவி ஒருவர் 2 நாள்களுக்கு முன் கொடைக்கானல் திரும்பி இருக்கிறார். அப்போது மாணவிக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாணவி மற்றும் அவருடைய அம்மாவின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மாணவி மற்றும் அவரது தாயார் இருவரும் திண்டுக்கல் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்ட்டனர். தாயாரின் ரத்த சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.