'நெறைய பேர் சைக்கிள் வாங்கிட்டே இருக்காங்க...' டாய்லெட் பேப்பர் மாதிரி சைக்கிளும் இப்போ ஸ்டாக் இல்ல...' இதனால' தான் எல்லாரும் சைக்கிள் வாங்குறாங்களாம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பல்வேறு நாட்டு மக்கள் சைக்கிள் வாங்குவதில் கவனம் செலுத்தகின்றனர். இதனால் டாய்லெட் பேப்பரை அடுத்து சைக்கிளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் எதிர்ப்பிற்கு மீறி பல அசம்பாவிதங்களும் உயிர் சேதங்களும் ஏற்பட்டாலும் சில நல்ல மாற்றங்களும் நிகழ்கிறது என்றே கூறலாம். வீட்டிலே அடங்கி இருக்கும் மக்களின் கவனம் தற்போது சைக்கிளின் பக்கம் திரும்பியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஜிம்க்கு செல்லவும், காலை நடைப்பயிற்சி செய்ய முடியாத நபர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சைக்கிளை வாங்கி வருகின்றனர்.
பல்வேறு நாடுகளில் மக்கள் அதிக அளவில் சைக்கிள் வாங்க ஆரம்பித்துள்ளதாகவும், அதனால் சைக்கிள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகள் இயங்காததால் பெரும்பாலும் சிறுவர்களும், இளைஞர்களும் தொலைக்காட்சியிலும், வீடியோ கேமிலும் ஊறி போவதால் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இதன் காரணமாகவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கித்தர முக்கிய காரணமாக விளங்குகிறது. நடந்து செல்வதை விட சைக்கிளில் செல்வதால் சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படும். வெளிநாடுகளில் பெற்றோர்களும் அலுவலகங்களுக்கு சைக்கிளில் செல்வதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் அதற்கு நேர் எதிராக கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் சைக்கிள்களின் தேவை குறைந்துள்ளதால், இந்தியாவின் புகழ்பெற்ற சைக்கிள் நிறுவனமான அட்லஸ், தனது கடைசி ஆலையையும் சில நாட்களுக்கு முன்பு மூடியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
