'கள்ளு கடையை திறந்த கேரளா...' ஆனால் ஒருத்தருக்கு 'இவ்வளவு' தான் கிடைக்கும்...! சைட்டிஷ் கேட்காதீங்க ப்ளீஸ்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 13, 2020 01:02 PM

கேரள மக்களின் கோரிக்கையை அடுத்து கள்ளு விற்கும் கடைகளை மட்டும் அனுமதி அளித்துள்ளது கேரளஅரசு.

The Government of Kerala has only sanctioned toddy shops

இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் முதலில் தலைதூக்கிய இடம் கேரளம். வெளிநாட்டுகாலில் வேலை செய்யும் மக்களை அதிகம் கொண்டுள்ள அம்மாநிலம் மிக பெரிய இழப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தனது அதிரடி கட்டுப்பாடுகளை கட்டவிழ்த்துவிட்டு தற்போது கொரோனா பாதிக்கப்பட்டதில் இரண்டு இலக்க எண்ணிக்கையை மட்டுமே கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

கடந்த வாரம் முதல் தனது மாநில ஊரடங்கு விதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வந்த கேரள அரசு, மதுக்கடைகளை மட்டும் நாடு தழுவிய ஊரடங்கு முடிந்தபின் தான் திறக்க அனுமதி அளிப்போம் என விடாப்பிடியாக கூறியது.

தற்போது கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கள் மற்றும் மதுக்கடைகளை திறக்கவேண்டும் என கேரள மக்கள் அரசிற்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர். மேலும் கள் விற்பனை தமிழ்நாடு உள்ளிட்ட பரவலான மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட பொருள் என்றாலும் கேரளாவில் பெரும்பான்மையான மக்கள் தென்னங்கள் குடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளாவின் கள்ளு கடைகளில் தோசை, சப்பாத்தி, புரோட்டா, சிக்கன், மீன் உள்ளிட்ட உணவு வகைகளின் விற்பனையும் அடிதூள் கிளப்பும்.

தற்போது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் விதமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த கள்ளு கடைகள் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை. மேலும் கள்ளுக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, உணவுவகை விற்பனைக்கு தடை விதித்துள்ளது ஆணை பிறப்பித்துள்ளது கேரள கலால் துறை.

ஒரே நேரத்தில் 5 பேர் மட்டுமே வரிசையில் நிற்க வேண்டும். ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒன்றரை லிட்டர் கள் மட்டுமே கொடுக்கப்படும். காலை 9 முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கள் விற்பனை அனுமதிக்கப்படும். கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது கேரள அரசு.

Tags : #TODDY