'நண்பர்களையே கொன்னு புதைச்சுருக்காங்க...' 'இன்ஃபார்மராக மாறியதால்...' 'தனியாக கூட்டிட்டு போய்...' 11 மாதங்களுக்கு பிறகு உடல்கள் கண்டுபிடிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 22, 2020 09:56 PM

சங்கிலி பறிப்பில் சிக்கிய இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய விசாரணையில் 11 மாதங்களுக்கு முன் 3 பேரை கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Discovery of three bodies buried eleven months ago

கடந்த 16-ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ஹவுசிங் போர்டு பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட யுவராஜ், வாசு, அரவிந்தன், சூர்யா மற்றும் சதிஷ் ஆகிய ஐந்து இளைஞர்கள் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது போல் பல வழிபறிகளையும், கொள்ளைகளிலும் நடத்தியுள்ளனர் என தெரியவந்தது. இவர்கள் மட்டும் இல்லாமல் சென்னையை சேர்ந்த ஜெயபிரகாஷ் இளங்கோ ஆகியோரும் சேர்ந்து பல இடங்களில் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர்.

போலீசாரின் பாணியில் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளனர்.  இதற்கு முன்பு இவர்களின் கொள்ளை கும்பலில் சென்னையை சேர்ந்த ஆசிப், நவீன் மற்றும் சூர்யாவும் சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு மனம் திருந்திய ஆசிப், நவீன் மற்றும் சூர்யா போலீசாருக்கு இன்ஃபார்மர் ஆக மாறி யுவராஜ் கும்பல் செய்யும் கொள்ளை சம்பவங்களை கூறியுள்ளனர்.

ஆசிப், நவீன் மற்றும் சூர்யா மூவரும் இன்ஃபார்மராக மாறியதை அறிந்த யுவராஜ் கும்பல் அடுத்த கொள்ளைக்கு திட்டம் தீட்டுவது போல் பெண்ணை ஆற்று மணல் பகுதிக்கு அழைத்துள்ளனர். அங்கு யுவராஜ் கும்பல் மற்றும் ஆசிப், நவீன், சூர்யா ஆகிய மூவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக முற்றி கொலையில் முடிந்துள்ளது.

யுவராஜ் கும்பல் மூவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்து, பெண்ணை ஆற்று மணல் பகுதியில் புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல்  வழக்கமான வழிபறிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதையடுத்து குற்றவாளிகளுடன் ராணிப்பேட்டை போலீசார் சடலங்களை புதைத்த பெண்ணையாற்று மணற்பகுதிக்கு சென்று, 11 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட  மூவரின் உடல்களை தோண்டி எடுத்துள்ளனர். இந்த சம்பவம், ராணிப்பேட்டை மக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags : #CRIME