'தூங்கி எந்திரிச்சப்போ...' '2 கைகளும் கட்டப்பட்டுருக்கு...' யார்டா இந்த வேலைய பார்த்தது...? - கண் முழிச்சு பார்த்த பாட்டிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரவில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் வசித்து வருகிறார் சாரதாம்மாள் என்ற பாட்டி. எப்போதும் போல உறங்க சென்ற பாட்டியை நேற்று நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பாட்டியை கட்டிப் போட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், 40000 ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
என்ன செய்வதென்று அறியாமல் கத்திய பாட்டியின் குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சாரதாம்மாள் பாட்டியை மீட்டுள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரினால் பாட்டியின் வீட்டிற்கு வந்த வந்த காவலர்கள் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டு, வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது

மற்ற செய்திகள்
