'காது பிரச்சனையில்' அவதிப்பட்ட மூதாட்டி!.. 'பரிசோதனை' செய்த 'மருத்துவருக்கு' காத்திருந்த 'ஆச்சரியம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 29, 2020 06:25 PM

சீனாவில் மூதாட்டி ஒருவரின் காதில் நுழைந்து வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி உயிருடன் வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Spider spins web inside an old womans ear china

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் உள்ள மின்யாங் மருத்துவமனைக்கு மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். அவருக்கு காதில் கடும் காது வலி இருந்ததால், அவதிப்படுவதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தனது காதில் சிலந்தி ஒன்று காதில் நுழைந்து வலை பின்னி வாழ்ந்தே வந்துள்ளது என்பதை அதுவரை பாட்டி அறிந்திருக்கவில்லை.

பின்னர் அவரது காதை மருத்துவர் பரிசோதித்தபோது, பந்து போன்ற உருண்டை வடிவலான தோற்றத்தில் ஏதோ தெரிந்ததை அடுத்து, ஓடோஸ்கோபி மூலம் பரிசோதிக்கத் தொடங்கினார். அப்போதுதான் பாட்டியின் காதில் சிலந்தி ஒன்று உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர், மருத்துவ உபகரணங்களை கொண்டு சிலந்தியை அகற்றியுள்ளார்.