'நடுராத்திரியில ஓடு விலகுது...' 'ஸ்லோவா ஒரு ஏணி வீட்டுக்குள்ள வருது...' 'ஃபர்ஸ்ட் ப்ளான் ஓகே, அடுத்தது...? - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் சாலைத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா என்பவரின் மனைவி பாப்பா (80). கணவனை இழந்த நிலையில் அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன்கள் அருகாமையில் உள்ள வீடுகளில் வசிகின்றனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (29-11-2020) இரவு வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாராம்.
இரவு 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டு ஓட்டைப் பிரித்து, மெதுமெதுவாக ஏணியை வீட்டினுள் இறக்கியுள்ளார். ஏணி வழியாக இறங்கி தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 32 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துள்ளார்.
மேலும் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழட்ட முயன்ற போது மூதாட்டி கண் விழித்து விட்டாராம். அவர் பதற்றத்தில் கூச்சலிடவே, திருடன் சங்கிலியை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுக் கதவைத் திறந்து தப்பியோடியுள்ளார்.
மூதாட்டி அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து திருடனைத் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
