'அது நமக்குள்ள நடந்தா போதும்'... 'வீட்டில் கர்ப்பிணி மனைவி'... 'ஹால்டிக்கெட் வாங்க போறேன்னு வந்த மாணவி'... தில்லாலங்கடி இளைஞரின் பகீர் திட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்படிக்கின்ற வயதில் தடுமாறிய பள்ளி மாணவியை, தனது இச்சைக்கு இரையாக்க நினைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் பூபதி. 23 வயது இளைஞரான இவர் மூலனூர் அருகே உள்ள காதக்கோட்டையில் பால்பண்ணையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். திருமணமான நிலையில் இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் மூலனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவியுடன் பூபதிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
பதின் பருவத்தில் படிக்கின்ற வயதிலிருந்த அந்த மாணவி படிப்பை மறந்து பூபதியுடன் பழக ஆரம்பித்துள்ளார். அவரின் பின்புலம் எதுவும் தெரியாமல் அவர் பழகிய நிலையில், பூபதி அந்த மாணவியிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார். மேலும் வெளியில் நாம் செல்லலாம் எனவும் அழைத்துள்ளார். இதை அனைத்தையும் நம்பிய அந்த மாணவி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் பெற்றோரிடம் பள்ளிக்கூடத்துக்குச் சென்று ஹால்டிக்கெட் வாங்கி விட்டு வருவதாகக் கூறி சென்றார்.
அதன்பிறகு அந்த மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப் போன பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்து மூலனூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. அப்போது ஈரோடு மாவட்டம் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் இருப்பதாக மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அதில் மூலனூர் பகுதியைச் சேர்ந்த காணாமல் போன பிளஸ்-1 வகுப்பு மாணவியும், வாலிபர் பூபதியும் எனத் தெரிய வந்தது. பூபதி திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியைக் கடத்தி சென்று, இருவரும் தனிமையில் இருக்கலாம் எனக் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியை மருத்துவ சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகப் பூபதியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
படிக்கும் வயதில் இருக்கும் மாணவ, மாணவிகளைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களின் நண்பர்கள் யார், அவர்கள் யாருடன் எல்லாம் பேசுகிறார்கள் என அனைத்தையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அவர்களுடன் அமர்ந்து பேசி அதனைச் சரி செய்ய வேண்டும். அப்போது தான் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும் என காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்
