உலகக்கோப்பை கால்பந்து FINAL.. கத்தாரில் இந்திய திரை பிரபலங்கள்.. யார் யார் இருக்காங்க பாருங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Dec 18, 2022 09:38 PM

கத்தாரில் இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில் இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் அங்கு சென்றிருக்கின்றனர்.

Deepika Padukone and Mammootty spotted in FIFA WC Final

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று இறுதிப்போட்டி நடைபெறுவதால் உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் பிரான்ஸ், மொரோக்கோ, அர்ஜென்டினா மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் நுழைந்தன. இதில் வெற்றிபெற்ற பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன. கத்தாரில் உள்ள லுஸைல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.

அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியானல் மெஸ்ஸி இந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் அர்ஜென்டினா வெல்லுமா என அந்த அணி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த போட்டியை காண மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி, மோகன்லால் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கார்த்திக் ஆர்யன் ஆகியோர் சென்றிருக்கின்றனர். முன்னதாக உலகக் கோப்பையை தீபிகா படுகோனே அறிமுகம் செய்தும் வைத்திருக்கிறார். இந்நிலையில், இறுதிப் போட்டியில், இந்திய நடிகர்கள் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Tags : #FIFA #QATAR #WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Deepika Padukone and Mammootty spotted in FIFA WC Final | Sports News.