அடடே.. BIGG BOSS விக்ரமனுக்கு ஆதரவாக தொல்.திருமாவளவன் பரபரப்பு POST! என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pichaimuthu M | Jan 18, 2023 03:31 PM

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது.

Thol thirumavalavan supportive tweet for BiggBoss Vikraman

Also Read | செல்ஃபி மோகத்தால் ரயிலில் ஏறிய நபர்.. டக்குனு மூடிய கதவு.. வேறு வழியின்றி 159 கி.மீ தூரம் பயணித்த சம்பவம்..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thol thirumavalavan supportive tweet for BiggBoss Vikraman

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம் மற்றும் ஜனனி, தனலெட்சுமி, மணிகண்ட ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் ஏடிகே வெளியேறினார்.

Thol thirumavalavan supportive tweet for BiggBoss Vikraman

நேற்று, சிறந்த போட்டியாளராக வலம் வந்த கதிரவன், பண மூட்டையை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் எனவும் நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Thol thirumavalavan supportive tweet for BiggBoss Vikraman

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன், ஷிவின் உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் மக்களின் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் Disney Plus ID app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம். அறம்வெல்லும்". என ட்வீட் செய்துள்ளார்.

Thol thirumavalavan supportive tweet for BiggBoss Vikraman

பிக்பாஸ் போட்டியாளர் விக்ரமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இல்லை".. 'தமிழ்நாடு‌ சர்ச்சை'.. ஆளுநர் பரபரப்பு விளக்க அறிக்கை..!

Tags : #THOL THIRUMAVALAVAN #BIGGBOSS VIKRAMAN #VIKRAMAN #VIJAY TV #BIGG BOSS 6 TAMIL #VCK THOL THIRUMAVALAVAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thol thirumavalavan supportive tweet for BiggBoss Vikraman | Tamil Nadu News.