“இந்த பிரச்சனையால நிறைய ஷோ பண்ணல.. ஆனாலும் இந்த 3 பெரிய ஸ்டார்ஸ் நான் உட்கார்ந்துகிட்டே HOST பண்ணலாம்னு சொன்னாங்க..” - டிடி உருக்கம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில், பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறினார்.
இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வந்த விஜய் டிவி டிடி ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தம்முடைய பார்வையை பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக அனைவரையும் பார்த்து முடித்துவிட்டு டிடி பிக்பாஸ் வீட்டை விட்டு முன்பு பேசிய பிக்பாஸ், “டிடி.. சமீபத்துல பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்து ஹவுஸ்மேட்ஸை பார்த்து பேசிட்டு போனவங்க எல்லாம் போகும்போது ஹவுஸ்மேட்ஸ் முகத்தில் குழப்பம் தெரிந்தது, இப்போ அனைவர் முகத்திலும் புன்னகை தெரியுது.” என குறிப்பிட்டு பாராட்டினார். டிடியும் நெகிழ்ந்தார். இதேபோல், விஜே மகஸ்வரி டிடியிடம் பேசும்போது, “ஒவ்வொருவர் பற்றியும் சும்மா சொல்ல வேண்டும் என சொல்லாமல், ஒவ்வொருவரையும் உண்மையில் கவனித்து சொல்லி இருக்கிறீர்கள், அதற்கு நன்றி” என தெரிவித்தார்.
அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பேசிய டிடி, “சமீபத்துல அனைவரும் Sacrifice task பண்ணீங்க. அதுல உருவமாற்றம் அனைவருக்கும் ஏற்பட்டது. அதை நாம் பார்க்கும்போது நமக்கே ஒரு கான்ஃபிடண்ட் குறையும் இல்லையா? நான் இப்போது ஸ்டிக்குடன் வந்தேன். ஏன்னா, நான் இவ்ளோ வருசமா விஜய் டிவில இருந்தேன். இவ்ளோ ஷோக்கள் பண்ணிருக்கேன் . ஆனால் autoimmune condition அண்மையில் ஏற்பட்டது. அது ரொம்ப கஷ்டம். யாருக்குமே வர கூடாது அது. அந்த நோய்க்குறியால் என்னால் நீண்ட நேரம் நிற்க முடியாமல் போனது, உட்கார வைக்கலாம் என்றேன். ஆனால் அந்த இயக்குநர் முடியாது என சொல்ல, அப்போது நான் அப்படின்னா, நான் ஸ்டிக்கோட நிக்க முடியும் என்று சொன்னேன், அதற்கு அவர், அது ரொம்ப அசிங்கமாக இருக்குமே என்றார்.
அவர் வேணும்னு சொன்னாரா? இல்லை.. தெரியாமல் தான் சொல்லி இருப்பாரு.. அப்ப எனக்கு என் கான்ஃபிடண்ட் சுத்தமா போயிடுச்சு. அதன் பிறகு சில் நாள்கள் ஆச்சு, அதில் இருந்து வெளியே வந்தேன், பின்பு நான் சொன்னேன், என்னோட அழகு ஸ்டிக் வெச்சாலும் இருக்கு. அது என் மனதில் இருக்கு, நான் பேசும் வார்த்தையில் இருக்கு என்றேன். அதனால் தான் நான் ஸ்டிக்கோடு இன்று வந்தேன். இது உங்களுக்கும் பொருந்தும். பாதி மீசையோ, எதுவே அதில் ஒன்றும் இல்லை உங்கள் அழகு.” என கூற, அனைவருமே ஆர்ப்பரித்து கைத்தட்டி டிடிக்கு வாழ்த்துக்களை கூறி உற்சாகப்படுத்தினர்.
மேலும் பேசிய டிடி, “பிறகு கொஞ்ச நாளாக நான் எந்த ஷோக்களும் பண்ணவில்லை. அதன் பின்னர் ஒரு பெரிய ஷோ. அந்த நட்சத்திரத்தை பார்க்கும்போதும் ஸ்டிக்கோடு தான் போனேன், ஒருவேளை அதோடு அந்த ஷோ பண்ண வேண்டாம் என்று அவர் சொன்னால், நான் ஒப்புக்கொண்டு வரவே நினைத்தேன், ஏனென்றால் அது அவர்களின் ஷோ. ஆனால் அந்த மொத்த ஷோவும் நான் மைக் மேடையில் நின்று ஹோஸ்ட் பண்ணியது போல தெரியும். ஆனால் நான் உயரமான ஸ்டூலில் அமர்ந்துதான் தொகுத்து வழங்கினேன்,. அது டிவியில் தெரியாது!
அதை “நான்தான் பண்ண வேண்டும்” என்று சொன்ன அந்த நட்சத்திரம் கமல் சார். அந்த ஆடியோ லாஞ்ச் விக்ரம் பட லாஞ்ச். அதன் பிறகும் எனக்கு உதயநிதி சார், அவருடைய ஷோ ஒன்றிற்கு வாய்ப்பளித்தார். அதன் பிறகும் பொன்னியின் செல்வன் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படத்துக்கும் எனக்கு மணிரத்னம் சார், “பரவால்ல அவர் உட்கார்ந்து ஹோஸ்ட் பண்ணட்டும்” என சொல்லி வாய்ப்பளித்தார்கள்.” என குறிப்பிட்டார். இதை அடுத்து ஹவுஸ்மேட்ஸ் நெகிழந்தனர்.