துணிவு, வாரிசுக்கு நடுவே 'நண்பகல் நேரத்து மயக்கம்' ரிலீஸ்.. PLAN பண்ணும் போது யோசிச்சீங்களா?.. மம்மூட்டி அளித்த செம்ம பதில்! EXCLUSIVE

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pichaimuthu M | Jan 18, 2023 12:25 AM

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

Mammootty Talks about Nanbagal Nerathu Mayakkam TN Release

இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.

லிஜோ ஜோஸ் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். மம்மூட்டியுடன் ரம்யா பாண்டியன், பூ ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டவர். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

கேரள அரசின் திரைப்பட விழாவில் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த படம் நாளை ஜனவரி மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நண்பகல் நேரத்து மயக்கம் படக்குழு கொடுத்துள்ளனர். இதில் பல கேள்விகளுக்கு நடிகர் மம்மூட்டி பதில் அளித்தார். "துணிவு, வாரிசு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி ஓடும் சூழலில் நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்கு  திரையரங்குகள் பிரிதல் மற்றும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா என்று ப்ளான் பண்ணும் போது யோசிச்சீங்களா?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மம்மூட்டி, "பிளானிங் எல்லாம் ஒண்ணும் கிடையாது. நான் ரசிகர்களை நம்புறேன். நல்ல படம் பார்க்க வருவாங்க. நல்ல படம் பார்ப்பார்கள். இந்த படம் நல்லா இருக்கும் என நம்புகிறேன்" என மம்மூட்டி பதில் அளித்துள்ளார்.

Mammootty Talks about Nanbagal Nerathu Mayakkam TN Release

நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்கு பிறகு லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி தனது அடுத்த படத்தை மோகன்லால் நடிப்பில் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த படத்திற்கு "மலைக்கோட்டை வாலிபன்" என தமிழில் பெயரிடப்பட்டுள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #MAMMOOTY #NANBAGAL NERATHU MAYAKKAM

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mammootty Talks about Nanbagal Nerathu Mayakkam TN Release | Tamil Nadu News.