“தலை வணக்கம் தமிழகமே”.. பிரமாண்ட வெற்றிக்கு நன்றி தெரிவித்த திமுக தலைவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 23, 2019 09:12 PM

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தந்த மக்களது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றியை தெரிவித்துள்ளார்.

M K Stalin addresses media after election victory

மக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வந்து கொண்டுள்ளன. இதில் இந்தியா முழுவதும் பாஜக 300 -க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுவருகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக பின்னடைவை சந்துள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் திமுக கூட்டணி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என இரண்டிலும் முன்னிலை பெற்றுவருகிறது. மொத்தம் 39 தொகுதிகளில் 37 இடங்களில் திமுக முன்னிலை பெற்று உள்ளது. அதேபோல் 13 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை உறுதி செய்து வருகிறது.

இந்நிலையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். அதில், ‘தலை வணக்கம் தமிழகமே!, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!’ என பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து அண்ணா அறிவாலயம் சென்ற மு.க.ஸ்டாலின் தொண்டர்களில் உற்சாக வரவேற்பில் மத்தியில்,‘மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவு கிடைத்துள்ளது. மாபெரும் வெற்றியை தேடித்தந்த கலைஞரின் உடன்பிறப்புக்களுக்கு நன்றி. இந்த வெற்றியைப் பார்ப்பதற்கு கலைஞர் இல்லையே’ என உருக்கமாக பேசியுள்ளார்.