9 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவி கேட்டுள்ளேன்.. முதல்வர் பரிசீலனை செய்வார்.. திருமாவளவன் நம்பிக்கை

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 26, 2022 05:31 PM

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

Thirumavalavan asked posts of mayor and deputy mayor in 9 corporations

11 நாடுகள் சேர்ந்து நின்னு எதிர்த்தா பயந்துருவோமா? ஐநா-வில் போடப்பட்ட தீர்மானம்.. சுக்குநூறாக உடைத்தெறிந்த ரஷ்யா

அப்போது அவர் பேசுகையில், 9 மாநகராட்சிகளில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை தங்களுக்கு  வாய்ப்பு வழங்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், இந்த கோரிக்கைகளை முதல்வர் பரிசீலினை செய்வார் என நம்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், கடலூரில் மேயர்,திருச்சியில் துனை மேயர் பதவி கேட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பணம் கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளது என்கிற ஓபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு தங்களது தோல்வி இப்படித்தான் ஓபிஎஸ் நியாயப்படுத்த முடியும் என்று கூறினார். மேலும், தமிழகத்தில் பாஜக நகர்ப்புற தேர்தலில் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் திமுக வாக்கு பெற்ற சதவீதத்தில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்றார்  பாஜக மூன்றாவது இடம் என்று சொல்லக்கூடாது சொல்ல வேண்டுமென்றால் பூஜியம் என்று தான் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

Thirumavalavan asked posts of mayor and deputy mayor in 9 corporations

மேலும், மூன்றாவது இடம் பெற்றிருக்கிறோம் என்று அவர்கள்தான் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் அதிமுக விட கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம் என பாரதிய ஜனதா கட்சி கூறுவது அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயல் என்று கூறியதோடு, மீண்டும் பாஜகவை தோழில் சுமந்தால் அதிமுக அதல பாதாளத்திற்கு சென்று விடும் என்பதால் தான் அதிமுக பா.ஜ.க-வை கழற்றி விட்டது - அதிமுகவே பாஜகவை கழற்றி விடும் அளவிற்கு மக்களிடம் பாஜக அவநம்பிக்கையை பெற்று உள்ளது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எனவே வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆட்சி பொறுப்பேற்ற இந்த நிர்வாகம் 8 மாதத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை வரவேற்ப்பை பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் தலைசிறந்த முதல்வர் என்கிற பாராட்டுதலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பெற்றுள்ளார். இந்த நன்மதிப்பு தேர்தல் வெற்றிக்கான காரணமாக அமைந்துள்ளது.

மேலும், 55 விழுக்காடு என்கிற அளவில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். போட்டியிட்ட 27 இடங்களில் 18 இடங்களில் வி.சி.க வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

உக்ரைனில் இருந்து வீடு திரும்பும் இந்தியர்கள்.. முதல்கட்டமாக 470 பேரை மீட்டுக்கொண்டு கிளம்பியது ஏர் இந்தியா

Tags : #THIRUMAVALAVAN #MAYOR #DEPUTY MAYOR #CORPORATIONS #துணை மேயர் பதவி #மாநகராட்சி மேயர் #விசிக தலைவர் திருமாவளவன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thirumavalavan asked posts of mayor and deputy mayor in 9 corporations | Tamil Nadu News.