மறக்க முடியாத அளவு மாப்பிள்ளைக்கு கொடுத்த கிப்ட்... 'ஒரே அசிங்கமா போச்சு குமாரு...' வாய் விட்டு சிரிந்த மணமகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரு திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளைக்காக அவரது நண்பர்கள் எடுத்து வந்த பிரம்மாண்ட அன்பளிப்பைப் பார்த்து மணமகள் உட்பட ஒட்டுமொத்த விருந்தினர்களும் சேர்த்து 'குபீர்' என மேடையிலேயே சிரித்துவிட்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் மணமகன்- மணமகள் இருவரும் மேடையில் வரும் விருந்தினர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அவர்கள் கொண்டு வரும் அன்பளிப்புகள் உடன் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தனர். அடுத்ததாக மணமகனின் நண்பர்கள் மேடையில் ஏறி மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க தயாராகிக் கொண்டு இருந்தனர்.
மணமக்கள் மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களும் வாயடைத்துப் போகும் வகையில் மணமகனின் நண்பர்கள் ஒரு பெரிய, பிரம்மாண்ட அன்பளிப்புப் பெட்டியை தூக்கிக் கொண்டு மேடையை நோக்கி வந்தனர். அந்த அன்பளிப்புப் பெட்டியை தூக்க முடியாமல் திணறித் திணறி நண்பர்கள் மேடையில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். ஒரு வேளை அவ்வளவு கனமான அன்பளிப்பு ஆக இருக்கும் என சுற்றி இருப்பவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
மாப்பிள்ளையோ தனது நண்பர்கள் கொண்டு வந்து தரப் போகும் பிரம்மாண்ட பரிசை எதிர்நோக்கி மேடையில் உற்சாகப் பூரிப்புடன் இருந்தார். நண்பர்கள் தூக்கி வரும் அன்பளிப்புப் பெட்டி 'வாஷிங்மெஷின்' பெட்டி ஆக இருந்தது. இதனால் ஒரு வேளை வாஷிங்மெஷினை அன்பளிப்பு ஆகத் தருகிறார்களோ? இல்லை அந்தப் பெட்டிக்குள் வேறு ஏதாவது ஒரு பெரிய அன்பளிப்பு இருக்குமோ? என அனைவரும் காத்திருந்தனர்.
மேடையில் மாப்பிள்ளை அந்த அன்பளிப்பை திறந்து பார்க்கும் போதுதான் தெரிந்தது. அது அன்பளிப்புப் பெட்டி இல்லை, வெறும் பெட்டி என்று. இதைப் பார்த்து மணமகள் உட்பட அங்கிருந்த சுற்றத்தார், விருந்தினர்கள் என அனைவரும் குலுங்கி குலுங்கி சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

மற்ற செய்திகள்
