VIDEO: ‘மாட்டேன்.. மாட்டேன்.. நான் வரமாட்டேன்’ மண்டப வாசலில் ‘அடம்பிடித்து’ நின்ற மணப்பெண்.. காரணத்தை கேட்டா அப்படியே ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமண்டப வாசலில் மணப்பெண் அடம்பிடித்து நின்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் வடமாநிலங்களில் திருமணத்துக்கு முன்னதாக ‘சங்கீத்’ என நிகழ்ச்சி வைப்பது வழக்கம். அப்போது மணமகன், மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் ஒன்று கூடி பாடல்களுக்கு நடனமாடி கொண்டாடுவர். அப்போது மணமகன் மற்றும் மணமகள் மண்டபத்துக்கு வரும் போது அவர்களை வரவேற்பதற்காக ஏதாவது சிறப்பு பாடலை ஒலிபரப்பு செய்வார்கள்.
அந்த வகையில், மண்டபத்துக்கு வந்த மணப்பெண் திடீரென உள்ளே வரமாட்டேன் என அடம்பிடித்து நின்ற வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. அதில் மணப்பெண் தனது தோழிகளுடன் மண்டபத்துக்கு வந்துகொண்டு இருந்துள்ளார். அப்போது, தான் வரும்போது ஒலிபரப்பு செய்ய வேண்டும் என பாடல் ஒன்றை நிகழ்ச்சி ஏற்பாட்டார்களிடம் மணப்பெண் கொடுத்துள்ளார்.
ஆனால் அவர் வரும்போது அந்த பாடல் ஒலிபரப்பு செய்யவில்லை. இதனால் கோபமடைந்த மணப்பெண், மண்டப வாசலிலேயே நின்று அந்த பாடலை ஒலிபரப்ப வேண்டும் என அடம்பிடித்தார். அப்போது அவரது அருகில் இருந்த தோழி ஒருவர், DJ-விடம் அந்த பாடலை போட சொன்னார். ஆனால் அவரிடம் மணப்பெண் கொடுத்த பாடல் இல்லைபோலும், அதனால் மீண்டும் வேறொரு பாடலை அவர் ஒலிபரப்பினார்.
இதனால் மறுபடியும் கோபமடைந்த மணப்பெண்ணை அவரது உறவினர்கள் சமாதானப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மணப்பெண் அப்படி என்ன பாடலை கேட்டிருப்பார்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
