VIDEO: ‘ஒய் திஸ் கொலவெறி’.. பாவங்க அந்த பொண்ணு.. கல்யாண வீட்டில் நடந்த கலகலப்பு.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்திருமண விழாவின் போது நடந்த கயிறு இழுக்கும் போட்டியில் பெண் ஒருவர் கீழே விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக திருமண விழாவில் நடைபெறும் வித்தியாசமான நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மணமக்களுக்கு சர்பரைஸ் கிப்ட் கொடுத்து ஏமாற்றுவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிக்கும் வகையில் அதை பரிசாக வழங்கிய வீடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
அந்த வகையில் நிரஞ்சன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றுள்ளனர். மணமக்களை நடுவில் அமர வைத்து இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
அப்போது மணமகன் வீட்டார் வேகமாக இழுத்ததும், பெண்ணின் வீட்டார் அப்படியே சரிந்து கீழே விழுந்தனர். அதில் ஒரு பெண் மட்டும் தூக்கி வீசப்பட்டார். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
