VIDEO: ‘பாவம்யா மாப்பிள்ளை’.. பொண்ணு பெரிய ‘கபடி’ ப்ளேயரா இருக்குமோ.. வைரலான ‘கல்யாண’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்திருமணத்தின்போது மணமகனிடம் ஜாலியாக விளையாடிய மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக திருமண விழாவின் போது நடைபெறும் குறும்பான சில விஷயங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மணமகனின் நண்பர்கள், மணப்பெண்ணுக்கு சர்பரைஸ் கிஃப்ட் ஒன்று கொடுத்தனர். அதைப் பிரித்தபோது கிஃப்ட் பாக்ஸில் குழந்தைக்கு பால் ஊட்டும் பாட்டில் இருந்ததால், கோபத்தில் மணப்பெண் அதை தூக்கி வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
அந்த வகையில் மணமகனிடம் ஜாலியாக விளையாடும் மணமகளின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திருமண நிகழ்வில்போது மாலை மாற்றும் சடங்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு சில திருமணங்களில், மாலை மாற்றும் நிகழ்வின் போது மணமகன் மற்றும் மணமகளை மறைப்பது, தூக்கிப் பிடிப்பது போன்ற வேடிக்கையான செயல்கள் நடைபெறும்.
அதேபோல் மாலை மாற்றும் சடங்கில் மணமகனுக்கு மணப்பெண் விளையாட்டு காட்டிய வீடியோ ஒன்றை மனிஷ் மிஸ்ரா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், முதலில் மணப்பெண், மணமகனுக்கு மாலையை அணிவிக்கிறார். இதன்பின்னர் மணமகன் தன் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி மணமகளுக்கு அணிவிக்க முயன்றபோது, மணமகள் மாலையை அணிந்து கொள்ளாமல் போக்கு காட்டினார். கபடி ஆடுவது போல் சிரித்துக்கொண்டே மணமேடையில் அங்கும் இங்கும் அவர் ஓடி விளையாடினார்.
यूं तो यह जयमाल का दृश्य है, पर दुल्हन की हरकत देखकर लगता है कि वो कबड्डी खेलने के इरादे से आई थी।
दूल्हे के दोस्तों का धन्यवाद जिन्होंने जयमाल सम्पन्न करवाने में मदद की। @navalkant @sengarlive @candidbhanot @PANKAJPARASHAR_ @nadeemNBT pic.twitter.com/cDzH0o8rQx
— Manish Mishra (@mmanishmishra) July 23, 2021
கடைசியாக ஓர் இடத்தில் நின்ற மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் மாலை அணிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்ற நிலையில், இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

மற்ற செய்திகள்
