VIDEO: ‘யாரு பார்த்த வேலைடா இது..!’ மாப்பிள்ளையுடன் தெறித்து ஓடிய குதிரை.. ‘அய்யோ யாராவது போய் பிடிங்க’.. களேபரம் ஆன ‘கல்யாண’ வீடு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமண விழாவின் போது குதிரை திடீரென மிரண்டு மாப்பிள்ளையுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவில் திருமணத்தின்போது மணமகனை குதிரையில் அழைத்து வந்து சடங்குகள் செய்வது வழக்கம். இது தற்போதும் அங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தானில் திருமண சடங்குகள் நடைபெறும் போது திடீரென மாப்பிள்ளையுடன் குதிரை மிரண்டு ஓடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ராம்புரா கிராமத்தில் திருமண விழா நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கமாக மாப்பிள்ளையை குதிரையில் அழைத்து வந்து செய்யும் சடங்குகள் நடைபெற்றுள்ளது. அந்த சமயம் கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென வெடி வெடித்துள்ளனர். இதனால் மிரண்டுபோன குதிரை மாப்பிள்ளையுடன் தெறித்து ஓடியது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குதிரையை விரட்டி பிடிக்க முயன்று பின்னாலேயே ஓடியுள்ளனர். ஆனால் வெடி சத்தத்தில் மிரண்ட குதிரை, அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டது. சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு மாப்பிள்ளையுடன் ஓடிய குதிரையை, வாகனத்தில் சென்று மடக்கி பிடித்தனர். இதனை அடுத்து திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் குதிரைக்கும், மாப்பிள்ளைக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
