'உலகத்தை' ஆளப்போகும் METAVERSE...! - கூகுளும், பேஸ்புக்கும் உருவாக்கப் போகும் மாய உலகம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்சமீபத்தில் முகநூலுக்கு மெட்டா என பெயரை சூட்டியிருந்தார் மார்க் ஜூக்கர்பர்க். இதன் பின்னணியில் இருப்பது மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் உலகம்.
இந்த இணைய உலகின் அடுத்த கட்டம் தான் மெட்டா வெர்ஸ். META UNIVERSE என்ற வார்த்தைகளை இணைத்து உருவானதுதான் METAVERSE. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு என்பது தான் இதன் அர்த்தமெட்டாவெர்ஸ் என்ற பதம் முதன்முதலில் 1992-ஆம் ஆண்டு நீல் ஸ்டீபன்சன் என்ற எழுத்தாளரின் Snow Crash என்ற அறிவியல் கதையில் வெளியானது.
இந்த மெட்டாவெர்ஸ் கோட்பாடு அடிப்படையில் உருவான மற்றொரு நாவல் தான் ரெடி பிளேயர் ஒன். இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இதனை 2018-ஆம் ஆண்டு திரைப்படமாகவும் எடுத்திருந்தார்.
மேலும், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஏற்கனவே ஒரு மெட்டாவெர்சை உருவாக்கும் முயற்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதை தவிர மெஷ் எனப்படும் நிறுவனம் இந்த மெய்நிகர் உலகத்தை உருவாக்க ஆர்வம் காட்டி வருகிறது.
தற்போதுள்ள Roblox, Fortnite ஆகிய ஆன்லைன் வீடியோ கேம்களும் மெட்டாவெர்ஸ் அடிப்படையில் உருவானவையே. நாம் இருக்கும் சூழலை கற்பனை சூழலாக மாற்றும் ஆக்மெண்ட் ரியாலிட்டி, அந்த கற்பனை சூழலில் நாமே இருப்பதாக உணரச் செய்வது தான் விர்ச்சுவல் ரியாலிட்டி. உதாரணமாக நிலாவிற்கு நாம் செல்ல முடியவில்லை என்றாலும். நிலாவிற்கு போய் அங்கு வாழ்வது போன்ற உண்மையான உணர்வை இந்த மெய்நிகர் உலகத்தின் மூலம் வழங்க முடியும். அப்படியான கற்பனை உலகம் தான் இந்த மெட்டாவெர்ஸ்.
இந்த டிஜிட்டல் உலகத்தின் உள்ள சென்று டிஜிட்டல் கரன்சியை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக சில ஆன்லைன் கேம்கள் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்துகின்றன. அவை NFT-அடிப்படையிலான ஆன்லைன் வீடியோ கேம் ஆகும், இது விளையாட்டாளர்கள் கிரிப்டோகரன்சியில் நிறைய தொகையை சம்பாதிக்க உதவுகிறது. அது போன்று தான் மெட்டாவெர்ஸ் உலகமும்.
அதுமட்டுமல்லாமல், ஆக்ஸி இன்ஃபினிட்டியில் $2.3 மில்லியனுக்கு ஒரு டிஜிட்டல் நிலம் விற்கப்பட்டது, இது மெய்நிகர் ரியல் எஸ்டேட் சந்தை அசுர வளர்ச்சி அடைந்துள்ளதை குறிக்கிறது. மெட்டாவெர்ஸின் மெய்நிகர் உலகம் கிரிப்டோகரன்சியின் பயன்பாட்டை தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது. பரிவர்த்தனைகள்/கொள்முதல்கள் மின்னல் வேகத்தில் நடப்பதால் பாதுகாப்பான பரிமாற்ற முறையை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாய உலகத்திற்குள் மக்கள் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.