'அவங்க'லாம் என்னைய விட வயசுல பெரியவங்க...' 'ரஜினியின் அரசியல் வருகையைக் குறித்து...' நாஞ்சில் சம்பத் கலகல பேச்சு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 05, 2020 04:32 PM

சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாஞ்சில் சம்பத் அவர்கள் கமல் மற்றும் ரஜினி அவர்களின் அரசியல் வருகை குறித்த கேள்விகளுக்கு அளித்த பதில் இணையதள நெட்டிசன்களுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Nanjil Sampath criticizes Rajini\'s political arrival

தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது பிறந்தநாள் பல்வேறு ஊர்களில் பொதுக்கூட்டம் கூட்டி  கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கையில் நேற்று பொதுக்கூட்டமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன. இதில் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார்.

செய்தியாளர் சந்திப்பில் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் தமிழகத்தின் ஆளுங்கட்சி குறித்தும், ரஜினி மற்றும் கமல் அவர்களின் அரசியல் திட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அவர்  “சேலத்துல இருந்து மேட்டூர் அணை தண்ணீர் இதுவரை வீணாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதுவரை ஏன் கொண்டுவரவில்லை? இப்போது தேர்தல் காலத்தில் இதனைச் செய்து இதுபோன்ற மத்தாப்பு கொளுத்துகிற வேலையைச் செய்து விடலாம் என்று அவர்கள் பார்க்கிறார்கள். 234 தொகுதிகளிலும் அவர்கள் கடைசேர முடியாது என்பதுதான் நிதர்சனமானது” என்று கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து, “கமலின் அரசியல் வருகை பற்றி ஏற்கெனவே தெரிந்து விட்டது, மையம் இப்போது மையத்தில் நிற்கிறது” என்று கமல் அவர்களில் மக்கள் நீதி மையம் பற்றியும், “ரஜினியின் அரசியல் வருகை தமிழ்நாட்டில் எந்த ரசாயன மாற்றத்தையும் உருவாக்க முடியாது. ரஜினி ரசிகர்களே என் வயதைத் தாண்டியவர்கள், அவர்கள் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது” என்று பேசினார் நாஞ்சில் சம்பத்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் ரஜினி தனது   மாவட்ட நிர்வாகிகளை அழைத்து சுமார் ஒரு மணி நேரம் கட்சி குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #NANJILSAMPATH #RAJINI