'என்னை அழகு-னு சொன்னது தவறா'?.. சீறும் தமிழச்சி தங்கபாண்டியன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 16, 2019 06:57 PM

'என்னை அழகான வேட்பாளர்' என்று உதயநிதி ஸ்டாலின் சொன்ன நோக்கத்தை, எதிரணியினர் திரித்துக் கூறியதாக, தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

thamizhachi thangapandian clarifies about udhayanidhi statement

தி.மு.க.வின் தென் சென்னை வேட்பாளரான தமிழச்சி தங்க பாண்டியன், தமிழ் மீது காதலும், தி.மு.க. மீது பற்றும் உள்ளதால் அவ்வாறு அழகு என்ற வார்த்தையை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியதாக தமிழச்சி தங்க பாண்டியன் கூறியுள்ளார்.

தென் சென்னை தொகுதியில் தி.மு.க.விற்கு வாக்கு சதவிகிதம் எபோதும் போல் உள்ளது என்று தெரிவித்துள்ள அவர்,  தற்போது இளைஞர்கள் அதிக அளவில் உள்ள வாக்கு வங்கியாக தென்சென்னை திகழ்கிறது என்று கூறினார்.

'தனிநபர் விமர்சனத்தை நாங்கள் முன்னெடுக்கவில்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிதான் முன்னெடுத்து உள்ளன. யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை கூட அ.தி.மு.க. செய்யவில்லை என்று தமிழச்சி தங்க பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொழில்துறை நிறுவனங்களுக்கு  உள்கட்டமைப்பு சரியாக இல்லாததற்கு  அ.தி.மு.க. தான் காரணமாக உள்ளது என்று புகார் கூறிய அவர், எங்களது உரிமைக்கான குரல் கொடுக்க தவறுவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் நமக்களித்த பிரத்யேகப் பேட்டியை இங்கே காணலாம்...

Tags : #LOKSABHAELECTIONS2019 #DMK #TAMIZHACHI #UDHYANITHI