‘திடீரென ஆம்னி பேருந்துக்கு நேர்ந்த கதி’.. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பழுதான பேருந்து ஒன்று கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பேருந்தில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் , பேருந்தில் தீ கொழுந்துவிட்டு பற்றி எரிந்தது. இதனைக்கண்டு அதிர்ந்து போன அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விஷயம் கேள்விப்பட்டதும், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சில மணித்துளிகளில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் தான் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த சேத சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், இதே இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 பேருந்துகள் எரிந்து சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
