'20 வருடத்துக்கு அப்றம் திரும்பவும் வரப்போகும் அந்த சுகானுபவம்!'.. குதூகலத்தில் ஹைதராபாத் வாசிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sivasankar K | Feb 08, 2021 03:16 PM

20 வருடங்களுக்கு பிறகு ஹைதராபாத்தில் திரும்பவும் இரட்டை அடுக்கு பேருந்துகள் வரப்போவதை எண்ணி ஹைதராபாத் வாசிகள் குதூகலத்தில் உள்ளனர்.

After 20 yrs double-deckers set to make comeback in Hyderabad

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத் சாலைகளில் மக்களின் ஆச்சரியத்தையும் இளைஞர்களின் ஆர்வத்தையும் தூண்டியவைதான் இரட்டை அடுக்கு பேருந்துகள் எனப்படும் டபுள் டெக்கர் பேருந்துகள். இந்த பேருந்துகளின் மேல் தளத்தில் ஏறி சவாரி செய்வது என்பது பலருக்கும் மகிழ்ச்சியான ஒன்று.

இன்றைய தினத்தை பொறுத்தவரை அது வெறும் மலரும் நினைவாக மட்டுமே இருக்கிறது. இப்போது மீண்டும் அந்த நினைவில் நீங்காத நாட்கள் நனவாக போகின்றன. 20 வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத் வரலாற்று நகர சாலைகளில் இயங்கிய அந்த டபுள் டெக்கர் பேருந்துகள் மீண்டும் அதே சாலைகளில் வலம் வர போகின்றன. சைக்கிள் ரிக்ஷாக்கள், டபுள் டக்கர் பேருந்துகள் உள்ளிட்ட பாரம்பரிய போக்குவரத்து முறைகளை மீண்டும் கொண்டு வந்து மக்களிடையே வரவேற்பைப் பெறுவோம் என்று அம்மாநில அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் லண்டன் உள்ளிட்ட உலகமெங்கும் இருக்கும் வரலாற்று நகரங்களில் இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் வரக்கூடிய மாதங்களில் ஹைதராபாத் நகர சாலைகளிலும் இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் இயங்கும் என்றும் 430 வருடம் பழமையான நகரின் சுற்றுலா பயணிகளை இந்த பேருந்துகள் கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: ‘ஓவர் ஸ்பீடில் ஓவர் டேக்!’.. ‘மின்னல் வேகத்தில் சேஸிங்!’.. ‘விடுதலை’ ஆகி தமிழகம் வரும் சசிகலா காரை மறித்த இளைஞரால் ‘பரபரப்பு!’.. வைரல் வீடியோ!

இதனால் அனுபவம் மிக்க தயாரிப்பாளர்களிடமிருந்து 25 இரட்டை அடுக்கு பேருந்துகளை உற்பத்தி செய்து வாங்குவதற்கு தெலுங்கானா போக்குவரத்துத்துறை டெண்டர்களை வழங்கியிருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. After 20 yrs double-deckers set to make comeback in Hyderabad | India News.