என்ன பண்றேன்னு எனக்கே தெரியல சார்...! கவர்மெண்ட் பஸ்ஸ ஆட்டைய போட நெனச்ச நபர்... - 'பைக்ல விரட்டி போய் வண்டி மூவிங்லையே 'த்ரில்' சேஸ்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கஞ்சா போதையில் செய்வதறியாது அரசு பேருந்தையே ஆட்டைய போட்ட நபரை பேருந்து ஓட்டும் போதே மடக்கி பிடித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்தை இயக்கிய நிலையில் கரூரில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்த வண்ணம் இருந்துள்ளன. இந்நிலையில் இன்று நண்பகல் கரூரிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்தை மர்ம நபர் ஒருவர் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் சிறப்பு பேருந்துகள் நிற்கும் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி நின்று கொண்டிருந்தபோது, அப்பேருந்தில் ஏறிய இளைஞர் கஞ்சா போதையில் வண்டியை ஓட்ட ஆரம்பித்துள்ளார்.
இதைக்கண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடனடியாக அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரின் வண்டியில் அமர்ந்து அரசு பேருந்தை துரத்திப் பிடித்தனர். மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கீதா ஹோட்டல் வரை போதையில் இருந்த இளைஞர் இயக்கி சென்று கொண்டிருந்த போது
சாதுர்யமாக டிரைவர் சரவணக்குமார் வண்டியில் ஏறி அவரிடம் இருந்து பேருந்தை கைப்பற்றினார்.
பேருந்தை ஓட்டி சென்ற நபரை காவல்நிலையத்தில் ஒப்படைத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் அஜித் என்பதும், கஞ்சா போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் தானே இயக்கியவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் அஜித்.