வெளிநாட்டுக்கு டூர் போன தம்பதி.. திரும்பி வந்ததும் காத்திருந்த கடிதம்.. "நாங்க வெளியூர்'ல இருக்குறப்போ இது எப்படி நடந்துச்சு??"
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று திரும்பிய குடும்பம் ஒன்று, தங்களுக்கு வந்திருந்த அபராதம் தொடர்பான விவரத்தை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர்.
Also Read | "இது பேட்ட பாயுற நேரம்".. தீவிர பயிற்சியில் இறங்கிய ரெய்னா.. வைரலாகும் வீடியோ.. பின்னணி என்ன??
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Gary மற்றும் அவரது மனைவி Clare ஆகியோர், கடந்த சில வாரங்களுக்கு முன், மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இதன் காரணமாக, தங்களின் காரை விமான நிலையத்தில் இருந்த கார் பார்க்கிங்கிலேயே நிறுத்தி விட்டு, கார் சாவியை விமான நிலைய ஊழியர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்ற கேரி மற்றும் கிளாரே ஆகியோர், அங்கே சிறப்பாக தங்களது விடுமுறை தினங்களை கழித்துள்ளனர். இதன் பின்னர், தங்களது சுற்றுலா பயணத்தை முடித்து விட்டு, தனது மனைவியுடன் மீண்டும் சொந்த ஊர் திரும்பி உள்ளார் கேரி. அப்போது தான், அவருக்கும் அவரது மனைவிக்கும் கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
30 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்ல வேண்டிய இடத்தில், தங்களின் கார் 55 கி. மீ வேகத்தில் சென்றதாகவும், அதற்கான அபராதம் கட்ட வேண்டும் எனக்கூறி, போலீசார் நோட்டீஸ் ஒன்றும் கேரிக்கு கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், அந்த நோட்டீஸுடன் கேரியின் கார் நம்பர் பிளேட்டுடன் கூடிய கார் நிற்கும் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
விமான நிலையத்தில் நின்ற கார், அபராதத்தில் சிக்கியதாக புகைப்படத்துடன் வந்த கடிதத்தைக் கண்டு, கேரி மற்றும் அவரது மனைவி அதிர்ந்து போயினர். இது பற்றி கேரி உடனடியாக மான்செஸ்டர் காவல் துறையை அணுகி விஷயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, வாடிக்கையாளருக்கு இந்த நிகழ்வு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தெரியும் என்றும், வாடிக்கையாளர் திரும்பி வரும் வரை விமான நிலையத்தில் கார் பத்திரமாக நின்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
அதே போல, புகைப்படத்தில் இருந்த காரின் படம், கேரியின் காரில் இருந்து வேறுபட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகிறது. இந்த சமபவத்தில், மான்செஸ்டர் போலீஸின் உதவியை நாடி இருக்கிறார் கேரி. வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த தம்பதிக்கு திரும்பி சொந்த ஊர் வரும் போது காத்திருந்த விஷயம், கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | ஊர் முழுவதும் வறட்சி.. "11 கோடி வருச 'மர்மம்' வெளிய வந்துருக்கு".. ஆடி போன ஆராய்ச்சியாளர்கள்!!