வெளிலதான் அழகு நிலையம் & ஸ்பா.. உள்ள நடந்ததே வேற.. போலீஸ் ரெய்டில் சிக்கிய தம்பதி.! புதுச்சேரியில் பரபரப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Oct 28, 2022 04:12 PM

புதுச்சேரியில் அழகு நிலையம் மற்றும் ஆயுர்வேத நிலையம் நடத்துவதாக கூறி, பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Couple arrested by a police raid at Beauty parlor in Puduchery

Also Read | வேலையே போனாலும் ட்விட்டர் CEO-க்கு அடிக்கும் ஜாக்பாட்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?.. முழு விபரம்..!

யூனியன் பிரதேசமான புதுச்சேரி அழகான கடற்கரைகள் மற்றும் எழில்மிகுந்த வீதிகளுக்கு பெயர்போனது. இதனாலேயே உள்ளூர் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கே வந்து செல்கின்றனர். இந்நிலையில், புதுச்சேரியின் சில பகுதிகளில் இயங்கிவரும் அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாவில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்து வந்திருக்கின்றன.

இதனை கருத்தில்கொண்டு போலீசார் சந்தேகத்திற்கிடமான அழகு நிலையங்களில் அதிரடி ரெய்டுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் புதுவை அரவிந்தர் தெருவில் அழகுநிலையம் மற்றும் ஆயுர்வேத நிலையம் எனும் பெயரில் பாலியல் குற்றம் நடைபெறுவதாக பெரியகடை காவல்நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அந்த காவல் நிலையத்தினை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அழகு நிலையம் செயல்பட்டு வந்த இடத்திற்கு சென்றிருக்கின்றனர்.

Couple arrested by a police raid at Beauty parlor in Puduchery

அப்போது, அந்த அழகு நிலையத்தில் இருந்த 4 பெண்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்த அழகு நிலையத்தை நடத்தி வந்ததாக சொல்லப்படும் குயவர் பாளையத்தை சேர்ந்த 35 வயதான பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

இந்த தம்பதியிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. கைது செய்யப்பட்ட தம்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | நம்ம எல்லாம் மிடில் கிளாஸ்".. 90-ஸ் கிட்ஸ்களின் ஜாலியான அனுபவங்களை புட்டுப்புட்டு வைத்த இளம்பெண்.. IAS அதிகாரி பகிர்ந்த சூப்பர் வீடியோ..!

Tags : #POLICE #PUDUCHERY #COUPLE #ARREST #BEAUTY PARLOR #POLICE RAID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Couple arrested by a police raid at Beauty parlor in Puduchery | India News.