"மாங்கல்யம் தந்துனானேனா".. கே எல் ராகுலை தொடர்ந்து.. படுஜோராக நடந்த பிரபல இந்திய வீரரின் திருமணம்.. வாழ்த்தும் பிரபலங்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jan 27, 2023 01:03 PM

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று முடிந்திருந்தது. இந்த தொடரை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றி உள்ளது.

Axar Patel married his girlfriend megha patel pics viral

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ஒரு நாள் போட்டி தொடரை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (27.01.2023) ஆரம்பமாகிறது.

ஒரு நாள் தொடரை போல டி20 தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதே வேளையில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் ஒரு நாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடும் என்றும் தெரிகிறது.

இதனிடையே, சமீபத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன் கே எல் ராகுல் திருமணம் நடைபெற்றது. நியூசிலாந்து தொடரிலிருந்து ஏற்கனவே விலகி இருந்த கே எல் ராகுல் தனது காதலியும், நடிகையுமான அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

Axar Patel married his girlfriend megha patel pics viral

Images are subject to © copyright to their respective owners.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த கே எல் ராகுல் - அதியாவின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகவும் செய்திருந்தது. கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

Axar Patel married his girlfriend megha patel pics viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் தற்போது மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான அக்சர் படேலின் நிச்சயதார்த்தம், அவரது காதலியான மேகா படேலுடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது அக்சர் படேல் - மேகா ஆகியோரின் திருமண நிகழ்ச்சிகள் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

Axar Patel married his girlfriend megha patel pics viral

Images are subject to © copyright to their respective owners.

திருமணத்திற்கு முன்பாக ஆட்டம், பாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளும் அரங்கேறி இருந்த நிலையில், தற்போது அவர்களின் திருமணமும் நடந்துள்ளது . இந்த திருமண விழாவில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மாறும் நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்த நிலையில், கிரிக்கெட் வீரரான ஜெய்தேவ் உனத்கட் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

Axar Patel married his girlfriend megha patel pics viral

Images are subject to © copyright to their respective owners.

அக்சர் படேல் - மேகா திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக வைரலாகி வரும் சூழலில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "நீங்க டைட்டில் வின்னர் இல்ல, Total Winner".. விக்ரமனுக்கு 'திருமாவளவன்' கொடுத்த பெயர்.. கூடவே கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு!!

Tags : #AXAR PATEL #MEGHA PATEL #AXAR PATEL MARRIED HIS GIRLFRIEND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Axar Patel married his girlfriend megha patel pics viral | Sports News.