'இதுல கோலிக்கு மட்டும் இல்ல'... 'எல்லோருக்குமே உரிமை இருக்கு'... கபில் தேவ் அதிரடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 02, 2019 02:51 PM

பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராட் கோலியின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

Kapil Dev says We have to respect everybody’s opinion

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் உள்பட, இதர பயிற்சியாளர் பதவியும் உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக, அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30-ம் தேதி வரை பிசிசிஐ காலக்கெடு அளித்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய, கபில்தேவ் தலைமையிலான, அன்ஷுமன் கெயிக்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக் குழு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ளது.

இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி என்று கேப்டன் விராட் கோலி விருப்பம் தெரிவித்திருந்தார். இது குறித்து தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட் கூறும்போது, ‘விராட் கோலியின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் தான் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கபில் தேவ் கூறும்போது, ‘பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராட் கோலி உட்பட, அணியில் உள்ள ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். பயிற்சியாளரை தேர்வு செய்வது ஒன்றும் கடினமான பணியில்லை. எங்கள் திறமைக்கு ஏற்ப செயல்படுவோம்’ என்றார். கமிட்டி உறுப்பினர்களில் மற்றொருவரான சாந்தா ரங்கசாமி, ‘பயிற்சியாளர் தேர்வு குறித்து கருத்து சொல்ல கேப்டன் விராட் கோலிக்கு உரிமை இருக்கிறது. பயிற்சியாளரை நாங்கள் 3 பேரும் கூட்டாக விவாதித்து முடிவு செய்வோம்’ என்று கூறினார்.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #KAPILDEV #COACH #TEAMINDIA #MENINBLUE