மீண்டும் திமுக இளைஞரணி செயலாளராக நியமனம்.. நன்றி தெரிவித்து உதயநிதி உருக்கமான ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Nov 23, 2022 08:27 PM

திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

Udhayanidhi Stalin selected as DMK youth wing secretary again

Also Read | அந்த மனசுதான் சார்.!! தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து நெகிழ வச்ச நபர்..!

திமுகவின் உட்கட்சி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதனையடுத்து, இதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கான நியமனங்களுக்கு அக்கட்சியின் பொதுக்குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுகவில் உள்ள பல்வேறு அணிகளுக்கான நியமனங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Udhayanidhi Stalin selected as DMK youth wing secretary again

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் திமுக இளைஞரணி செயலாளராக முதன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, தற்போது மீண்டும் இளைஞரணி செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"இளைஞரணியை ஏறத்தாழ 40 ஆண்டுகள் வளர்த்தெடுத்து வலுப்படுத்திய கழகத் தலைவர் முக.ஸ்டாலின் அவர்களிடம், திமுக இளைஞரணி செயலாளராக கழக பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி நன்றி தெரிவித்து வாழ்த்துப் பெற்றேன். திறன் மிகுந்த கழக இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin selected as DMK youth wing secretary again

அதேபோல, எம்பி கனிமொழி கருணாநிதி திமுகவின் மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தார். அவருக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து  அந்த பதவி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சன்னுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | ஒருகாலத்துல பெரும் கோடீஸ்வரரா இருந்தவரா.?.. இப்போ ரோட்டுக்கடை நடத்தும் துயரம்.. இதான் காரணமா.?

Tags : #DMK #MKSTALIN #UDHAYANIDHI STALIN #DMK YOUTH WING SECRETARY #CM MK STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Udhayanidhi Stalin selected as DMK youth wing secretary again | Tamil Nadu News.