துபாயில் காதலித்த காதலனை.. சொந்த ஊருக்கு அழைத்த இளம்பெண்.. நம்பி விமானத்தில் வந்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை அடுத்த பறக்கை என்னும் பகுதியை சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | 10 ரன்னுக்கு ஆல் அவுட்டான அணி.. 2வது பேட்டிங்கில் எதிரணி செய்த தரமான சம்பவம்.. சுவாரஸ்ய பின்னணி!!
இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், துபாயில் அப்துல் காதர் இருந்த சமயத்தில் அவருக்கும் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இன்ஷா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் உருவானதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு பேரும் துபாயில் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், சமீபத்தில் இன்ஷா ஊருக்கு திரும்பி இருந்தார்.
இதனையடுத்து சில தினங்கள் முன்பு அப்துல் காதரை தொடர்பு கொண்டு பேசிய இன்ஷா தனது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் வீட்டுக்கு வந்து பெற்றோரை சந்தித்து பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கும் சம்மதம் தெரிவித்த அப்துல் காதர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக துபாயில் இருந்து காதலியை பார்ப்பதற்காக விமானத்தில் திருவனந்தபுரம் வந்தடைந்துள்ளார்.
விமான நிலையம் வந்ததும் அப்துல் காதரை அங்கே இன்ஷாவுடன் வந்திருந்த சிலர், சுற்றி வளைத்து காரில் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. என்ன நடப்பது என்பது தெரியாமலே அதிர்ச்சியில் உறைந்து இருந்த அப்துல் காதரிடம் இன்ஷாவுடன் வந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. காதலியுடன் சிலர் ஒன்றாக வந்து பணம் கேட்டு மிரட்டியதால் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போன அப்துல் காதர் பணம் தர முடியாது என்று சொல்லி உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து ரிசார்ட் ஒன்றிற்கு வந்த அந்த கும்பல் இரண்டு நாட்கள் அப்துல் காதருக்கு தொல்லை மற்றும் மிரட்டல் கொடுத்தும் வந்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவரிடம் இருந்து செல்போன்கள் மற்றும் நகையை பறித்ததுடன், அவரது வங்கி கணக்கில் இருந்து 17 லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்தாக தகவல்கள் கூறுகின்றது.
இரண்டு நாட்களுக்கு பிறகு அப்துலை அவர்கள் விடுவித்த சூழலில், இது தொடர்பாக கேரளா காவல்துறையிடம் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். தன்னுடைய உறவினர்களுக்கும் இது பற்றிய விவரத்தை தெரிவிக்க இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இன்ஷா உள்ளிட்ட அந்த கும்பலையும் தேடிப்பிடித்து ஆறு பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மற்ற செய்திகள்
