"அன்பினால் மக்கள் மனங்களை ஆளும்".. அமைச்சர் உதயநிதியை வாழ்த்தி மேயர் பிரியா TWEET!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று பொறுப்பேற்றார்.

முதல் அமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரவி உதயநிதிக்கு காலை 9:30 மணிக்கு பதவிப் பிரமாணம் & ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் சினிமாவிலும் நடித்தும் திரைப்படங்கள் தயாரித்தும் வருகிறார்.
அமைச்சரான உதயநிதிக்கு பல பிரபலங்களும் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு வாழ்த்து கூறியுள்ளார். அந்த டிவீட்டில், "அமைதியாய் இருந்தாலும்...! அடக்கமாய்த் திகழ்ந்தாலும்...! அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துகள்!" என்று மேயர் பிரியா பதிவிட்டுள்ளார்.
அமைதியாய் இருந்தாலும்...! அடக்கமாய்த் திகழ்ந்தாலும்...! அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்! pic.twitter.com/VNod4yYxFp
— Priya (@PriyarajanDMK) December 14, 2022

மற்ற செய்திகள்
